Tamils
culture,news,community

தீபாவளி


தமிழ்க் கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். வரும் செவ்வாய்க்கிழமை ஆறாம் தேதி நவம்பர் மாதம் உலகத் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி தான். தீப ஆவளி வரிசையாக விளக்குகளை வைத்துத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை வழக்கப்படுகிறதைப் போல தீபாவளிக்கும் நிறையக் கதைகள் இருக்கின்றன. தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.

lire cette article en francais

தீபாவளிக் கதைகள்

தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களைக் கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன புராணங்கள். பலருக்கு நராகாசுரன் கதையைத் தெரியும். நரகாசுர‌ன் எ‌ன்ற அர‌க்க‌ன் ஒருவ‌ன் இரு‌ந்தா‌ன். ‘நரன்’ என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். நரகாசுர‌ன் தே‌வ‌ர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனா‌ல் ‌கிரு‌‌ஷ்ண பகவா‌ன் அவனைக் கொல்ல நினைத்தார். நரகாசுரன் பூமி தாய்க்குப் பிறந்தவனால் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாது. அதனால் கிரு‌‌ஷ்ண பகவா‌ன் ஒரு தந்திரம் செய்து நரகாசுரனுடன் போரிட்டார். அவன் கிரு‌‌ஷ்ண பகவா‌ன் மீது அம்பு எய்தியும்போது அந்த அம்பு மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதைப் பார்த்த சத்திய பாமா (பூமியின் அவதாரம்) கோபம் அடைந்து அவனைக் கொன்றான். அப்போது தான் அவனுக்குச் சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. “நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும், அதனால் தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாகக் கொண்டாட வேண்டும்” என்று நரகாசுர‌ன் வேண்டினான். இதைக் கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.

 

வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான் இராவணனைஅழித்துவிட்டுத் தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும் லட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றினார்கள். இதுவே தீபாவளிக்குப் பிறந்த ஒரு கதையாகும்.

ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாட்கள் கேதாரகௌரி விரதம் முடிவடைந்து சிவன் சக்தியைத் தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ வடிவம் எடுத்தார். இறவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும்.

 

 

தீபாவளி நாளன்று

தீபாவளி நா‌ளி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்து எ‌ண்ணெ‌ய் தேய்த்துக் கு‌‌ளி‌த்துப்புத்தாடை அ‌ணி‌ந்து பல வகை ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்து ப‌ட்டாசு வெடி‌த்துக் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம்.
தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. இ‌ந்தநா‌ளி‌ல் ‌தீபங்களை வ‌ரிசையாக வை‌த்து ம‌கி‌ழ்‌ந்து கொ‌ண்டாடுவா‌ர்க‌ள்.தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம்தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதம் முன்பு யம லோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் படையல் போட்டு அவர்களுக்கு நம் கடமையைச் செய்திருப்போம். முன்னோர்கள் மீண்டும் யம லோகத்துக்குச் செல்ல அவர்கள் செல்லும் பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காகத் தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் மாலை நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். இதன் மூலம் ஆண்டு முழுவதும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவில் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை.

 

 

ஆனால் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு துக்கமா அல்லது பண்டிகையா என்று பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். “எண்ணெய் குளித்துப் புதிய ஆடை அணிந்து இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகளால் படையல் போடுவது, தமிழ்கள் இறுதிச் சடங்குக்குப் பின் நடக்கும் வழக்கமுறையாகும். ஆண்டுதோறும் தமிழர்கள் வீட்டில் தீபாவளிப் பண்டிகையின் பெயரால் அதே சடங்கு நடைபெறுவதால் தமிழர்களுக்கு ஒரு கேள்வி வரும். இறந்தவர் தமிழர்களுக்கு யார்? யோசித்துப் பாருங்கள்!