Tamils
culture,news,community

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு


தமிழ்

தமிழரின் நாகரிகம் மிகப் பழங்காலம் தொட்டுச் சிறந்த நிலையில் இருந்து வந்துள்ளது. பழங்காலத் தமிழருடைய வாழ்க்கையையும், அவர்களின் பண்பாட்டுக் கூறுகளையும், நாகரிக வளர்ச்சியையும் சங்க இலக்கிய நூல்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழருக்கு மட்டும் என்று எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக உதவும்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி. தமிழன் பிறந்தகம் மூழ்கிப்போன குமரிக்கண்டம் என்பது முச்சங்க வரலாற்றாலும். காலப்போக்கில் தமிழரின் பண்பாட்டையும் மரபையும் தழைத்தொங்கி வந்தன.

தமிழ்ப் பண்பாடு

தமிழ்க் காலத் தொடக்கத்தில் பல விழாக்கள் தமிழ் நாகரிகத்தால் கொண்டாடப்பட்டன. காலப் போக்கில் மீண்டும் பல பண்பாடுகளையும் விழாக்களைத் தோன்றின. பரம்பரை பரம்பரையாக உலகம் முழுதும், தமிழர்கள் பழந்தமிழரின் பண்பாடுகளையும் விழாக்களையும் பாதுகாக்க முயன்றுகிறார்கள். அதைப் போல மொரீசியசு நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பழந்தமிழரின் பண்பாட்டுக் கூறுகளையும், விழாக்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். காவடி, தீமிதி, தைப் பொங்கல், ஆடிப் பெருக்கு போன்ற திருவிழாக்களை மொரீசியசு தமிழர்களால் கொண்டாடப்படும்.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு

உலகம் முழுதும் தமிழர் அனைவரும் நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் பதினெட்டாம் தேதியில் ஆடிப் பெருக்கு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். தமிழ் நாட்டில் ஆடி மாதத்தில் தான் பருவ மழை வலுவடைந்து காவிரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதன் வருவதைத்தான் மக்கள் ஆடிப் பெருக்கு ஆடி மாதத்தில் பதினெட்டாம் நாளில் என்று கொண்டாடுவார்கள். இந்தப் பருவ மழைக் காலங் காரணத்தால் இந்த மாதம் மாரியம்மனுக்கு மாதம் என்று சொல்லப்படும். மேலும் இந்த மாதத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை என்பதையும் மிகத் தர்க்கமானது. ஆனால் இந்த மாதத்தில் பதினெட்டாம் நாளில் தனிச் சக்தி உண்டு. அதனால் ஆடி மாதம் 18ஆம் தேதி மிகவும் முக்கியமானது. அன்று ஆற்றங்கரையோரம் முழுதும் உற்சாகக் கோலாகலம் தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். இது பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். அன்று பெண்கள் ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்குவார்கள். பெருக்கெடுத்து ஓடிவரும் அந்தப் புதுவெள்ளம், புதுநீர் வரும்போது பெண்கள் தாலியை மாற்றிக் கொள்வார்கள். அன்று கன்னிப் பெண்களும் மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் அணிந்து, நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். சுமங்கலிகள் தீர்க்கச் சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். ஆடிப் பெருக்கு எழுந்திருக்கும் இந்தத் தினத்தில், இறைத் தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்யப்படும் போது, ஒரு நபரின் வாழ்க்கையில், ஏராளமான வாக்குறுதிகளைஅளிப்பதற்கான ஆவிக்குரிய முக்கியத்துவம் உள்ளது.

 

 

 

 

 

ஆடிப் பெருக்குக் கதை

சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனையும் விஷ்ணுவையும் ஒரு பார்வைக்கு ஆசீர்வதிக்கும்படி கோமத்தியின் நினைவாக இந்து புனித நூல்களான பார்வதி அம்மையார் குறிப்பிட்டுள்ளார். சங்கரநாராயனார் என்ற இடத்திலுள்ள சங்கரநாராயணமாக ஆடிப் பெருக்கு என்ற இந்த நாளில் சிவன் தோன்றினார். ஆகையால் இது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் நாள் மற்றும் உங்கள் வாழ்க்கையைத் தொடுவதற்கு ஏராளமாக உள்ளது. இந்த மாதத்தில் பார்வதி தேவி வழிபாடு செய்கிறார். அவருக்கு பதினெட்டு வகையான அரிசி உணவை வழங்கியுள்ளார்.

 

இலக்கியக் கூறுகள்

சங்க நூல்களில் ஆடிப் பெருக்கைப் பற்றிப் பல பாடல்கள் வருகின்றன. ஆதி மாந்தியார் என்ற பெண்பாற் புலவர் ஆடிப் பெருக்கில் காவிரி கடலில் கலக்கின்ற இடத்தில் இழந்த தன் கணவனைத் தேடி மீண்டும் அடைந்தாள் என்று காண்கிறோம்.

ஆடிப் பெருக்கு நாளில் காவிரி நதிக் கரையில் வெள்ளம் பெருகி வரும். பெண்கள் எல்லாம் தத்தம் கணவர்களுடன் ஆற்றங்கரையில் கூடி இறைவனை வணங்கி ஆற்றில் விளக்குகளை விட்டு ஆடிப்பாடி மகிழ்வர் என்று சங்க நூல்கள் சான்று பகர்கின்றன.

சிலப்பதிகாரம் என்ற சிறந்த காப்பியத்திலும் ஆடிப் பெருக்கு என்ற விழாவைப் பற்றிப் பேசுகிறது.

 

செய்யும் முறை

அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு, பூ, மஞ்சள், குங்குமம், வளையல், சங்கிலி போன்ற மங்கலப் பொருட்களோடு தன் வயது ஒத்தவர்களோடு ஆற்றங்கரைக்குக் கிளம்புவார்கள்.

ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலையிலிருந்து வேலை தொடங்கிவிடும். எலுமிச்சைச் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று செய்துவிட்டு, அவற்றை ஆற்றுக்குக் கொண்டு போவார்கள். ஆற்றை அடைந்ததும் ஒவ்வொருவர் தனக்கான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாழை இலையை விரித்துவைத்து, வெற்றிலை வைத்து அதில் மஞ்சள் பிள்ளையாரை வைப்பார்கள். இலையில் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பூ, வாழைப்பழம் பொங்கல் சோறு, தேங்காய் ஆகியவற்றை வைப்பார்கள். பிறகு தேங்காயை உடைத்துச் சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மதிக்க விடுவார்கள். அப்போது கணவன் உதவியால் பெண்கள் தாலியை மாற்றிவிடுவார்கள். வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவது நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் கலப்பு சாதத்தை எல்லோருக்கு உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழாஅந்நாளில் பெண்மார்கள் தாலியை மாற்றி ஆனால் மறுபடியும் திருமணப் பொருத்தனைகளை வாக்குறுதி செய்வார்கள்.

 

 

கட்டுரை, காணொளி, நிகழ்வு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அல்லது எங்களுடன் இணைந்து விருப்பம் உள்ளவர்கள் இந்த Facebook அகப்பக்கத்தைச் சேர்ந்து, எங்களுக்கு ஒரு செய்தி அனுப்புக் கொள்ளுங்கள். நீங்களும் ‘Tamil.mu’ அகப்பக்கத்தில் கட்டுரையும் படங்களும் பகிர்ந்து கொள்ளலாம். ஏதாவது பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால் ஒரு செய்தி அனுப்புக் கொள்ளுங்கள்.